எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி
க+விதை=கருத்தை விதை

Followers

எனது வலைத்தளங்கள்

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Saturday, November 1, 2014

குமுறுகிறாள் ஒரு விதவை !



கோடி கணக்கு கனவுகள 
மனசுக்குள்ள பொத்தி வச்சி 
ஆசப்பட்டு வாழ வந்தே 
அத்தனையும் வீணா போச்சி...! 

வெள்ளாட போட்டுகிட்டு 
பள்ளிக்கூடம் போகயில 
வித விதமா ஆசப்பட்டே 
விசித்திரமா கனவுகண்டே...! 

வெள்ள பொடவ கட்டிக்கிட்டு 
பள்ளியற போகுறப்ப 
படும்பாட்ட என்ன சொல்ல - எனக்கு 
பக்கதுண யாருமில்ல...! 

கல்யாணம் சடங்கு வந்தா 
சொல்லாம தள்ளி வச்சி 
அமங்கலினு காட்டுறாங்க 
என்ன தப்பு நா செஞ்சே ? 

நல்ல உடுப்பு உடுத்திக்கிட்டு 
கட பக்கம் போகுறப்ப 
புருசன் செத்த கவல எனக்கு 
கொஞ்சம் கூட இல்லன்னு 
குத்தல் கத சொல்றாங்க...! 

அண்ணன் தம்பி மாதியுள்ள 
தெரிஞ்சவுங்க வந்து போனா 
தேவையில்லா பட்டம் குத்தி 
தெருவோரம் சிரிக்குறாங்க...! 

தப்பி தவறி சிரிச்சிப்புட்டா 
தவறான பேர சொல்லி 
கூசாம பேசுறாங்க, 
பெரிய கொடும செய்றாங்க...! 

அவலப்பட்டு வாழும் என்ன 
கேவலப்படுத்தி பேசாதிங்க 
சந்தோசம் வேணாமுங்க 
சங்கடத்த தறாதிங்க...! 

எழுதியவர்:K.S.கலை
கவிதைக்கான கருத்துகளைப் பார்க்க


இன்றைய கல்வியின் தரம்

இன்றைய கல்வியின் தரம்
ஆயிரம் ஆயிரம் பணத்தை 
மெட்ரிக் பள்ளிகளில் கொட்டிவிட்டு 

தன் மகனின் செய்முறைத் தேர்வுக்காக 
நோட்டில் மகனுக்கு பதிலாக எழுதும் பெற்றோர்கள். 

செய்முறையை அவனுக்கு சொல்லிக் கொடுக்காமல்
 அதை அனுமதிக்கும் பள்ளி

எழுதியவர்:சொ.நே.அன்புமணி











கவிதைக்கான கருத்துகளைப் பார்க்க

வாழ்க்கையின் பகுதிகள்


அன்பு எல்லாராலும் 
எல்லாரிடமும் காட்டப்படுவது. 
அறிவு எல்லாரிடமும் இருப்பது 
காதல் ஒருவர் மற்றொருவரிடம் 
மட்டும் காட்டுவது 
நட்பு குறிப்பிட்ட வட்டத்திற்குள் காட்டப்படுவது. 
பாசம் தெரிந்தவர்களிடம் மட்டும் வருவது 
மனித நேயம் தெரியாதவர்களிடமும் வருவது 
கல்வி ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைப்பது 
வேலை ஒரு சிலருக்கு 
மட்டுமே நினைத்தது கிடைப்பது 
பணம் ஒரு சிலரிடம் மட்டுமே அதிகமாய் இருப்பது 
நல்லகுணம் சிலரிடம் மட்டுமே கிடைப்பது 
திறமை எல்லாருக்கும் இருப்பது 
நோய் எல்லோருக்கும் இருப்பது. 
சாத்னை ஒரு சிலரால் நிகழ்த்தப்படுவது. 
வேதனை அனைவருக்கும் இருப்பது. 

அம்மா வாழ்வின் ஆரம்பம் 
அப்பா வாழ்வின் வளர்ச்சி 
நல்ல நண்பர்கள் வாழ்வின் ஊக்கம் 
காதலி நாம் சொல்லாமல் 
நம் பிரச்சனையை புரிந்துகொள்ளும் ஓர் உயிர். 
உறவினர்கள் வாழ்வில் பணம் 
இருந்தால் பக்கத்தில் 
ஆசிரியர்கள் வாழ்வின் ஏணி. 
மனைவி வாழ்வில் நமக்காக வாழும் உயிர் 
குழந்தைகள் நமக்குப்பின் வாழும் உயிர் 
மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை 
அனைத்தையும் கடந்து செல்வதுதான் வாழ்க்கை.

எழுதியவர்:சொ.நே.அன்புமணி











கவிதைக்கான கருத்துகளைப் பார்க்க 

மெட்ரிகுலேசன் பள்ளியும் ,தமிழ் மீடியப் பள்ளியும்

மெட்ரிகுலேசன் பள்ளியும் ,தமிழ் மீடியப் பள்ளியும்
தமிழ் மீடியப் பள்ளியில் 

படிக்கும் போது ஏன் ?என்று கேட்டேன் . 

விளக்கமும் கிடைத்தது, 

பாராட்டும் கிடைத்தது,புரியவும் செய்தது. 

மெட்ரிகுலேசன் பள்ளியில் 

படித்தபோது ஏன்? என்று கேட்டேன் 

விமர்சனம் கிடைத்தது. 

விடையும் கிடைக்கவில்லை. 

மனப்பாடம் செய் என்றார்கள். 

மெட்ரிகுலேசன் பள்ளிக்கும் 

தமிழ் மீடியம் பள்ளிக்கும் வித்தியாசம் 

கோட்டு சூட்டு இடவசதி வாய்ப்பே 

அல்லாமல் வேறு எதுவும் இல்லை. 

இக்கால கல்வி முறைக்குத் தேவை 

மதிப்பெண் என்ற ஒன்று 

அறிவு என்ற ஒன்று அல்ல.

எழுதியவர்:சொ.நே.அன்புமணி











வறுமையும்,வல்லரசும்

வறுமையும்,வல்லரசும் (குழந்தைதொழிலாளி   பற்றிய  கவிதை )

குலக் கல்வித் திட்டம் ஒழிந்து 
குழந்தைதொழிலாளி முறை 
காரணம் வறுமை. 
பாடப்புத்தகத்தைப் பிடிக்க வேண்டிய கையில், 
பஞ்சுமிட்டாய் விற்ற கூலிப்பணம். 

சிலேடுக்கு மாற்றாக பிளேடு, 
எழுதுகுச்சிக்கு மாற்றாக பஞ்சுமிட்டாய்க்குச்சி, 
பள்ளி மணி ஓசை கேட்கவேண்டிய 
காதில் வியாபாரமணி ஓசை, 
ஆசிரியரின் பேச்சைக் கேட்க 
வேண்டிய வயதில் முதலாளியின் 
ஏச்சைக் கேட்க வேண்டிய நிலை, 
காரணம் வறுமை. 

குழந்தைகளை தொழிலாளியாக அனுப்புவதால் 
நட்டம் குழந்தைகளுக்கு,நாட்டுக்கு,வீட்டுக்கு 
இலாபம் முதலாளிகளுக்கு 
கருப்புப் பணம் வழியாக 
என்றைக்கு குழந்தைதொழிலாளி முறை 
ஒழிகின்றதோ அன்றைக்கே 
இந்தியா வல்லரசு நாடு! 

எழுதியவர்:சொ.நே.அன்புமணி










கவிதைக்கான கருத்துகளைப் பார்க்க

குழந்தைப் பருவம்

குழந்தைப் பருவம்
எந்தக் கவலையும் 
இல்லாத குழந்தைப் பருவம் 
எந்த ஒரு செயலிலும் 
அனுபவம் கண்ட குழந்தைப் பருவம் 
எந்த சூழலையும் எதிர் நோக்காமல் 
நிகழ்காலத்தை மட்டும் நினைக்கும் 
நினைத்த போது தூங்கும் 
விரும்பியதைச் செய்யும் குழந்தைப் பருவம் 
எந்தச் செயலையும் துணிச்சலாக செய்யும் 
துருதுரு வென சுற்றித் திரியும் பருவம் 
கள்ளங்கபடம் இல்லாமல் கட்டில் மேல் இருந்து 
துள்ளிக்குதிக்கும் ஆனந்தப் பருவம் 
எந்தவொரு பொருளுக்கும் 
பிடிவாதம் பிடிக்கும் வெகுளிப் பருவம் 
சேட்டைகள் செய்து மண்டை உடைந்த 
விளையாட்டுப் பருவம் 
கொஞ்சும் மழலைப் பேச்சு மிகுந்தும் 
மிகுந்த மகிழ்ச்சியால் ஆனந்த மழையில் 
கப்பல் விட்டு விளையாடியப் பருவம் 
பள்ளிக்குப் பயந்தப் பருவம் 
மீண்டும் கிடைக்குமா இந்த அரிதானப் பருவம்.

எழுதியவர்:சொ.நே.அன்புமணி











கவிதைக்கான கருத்துகளைப் பார்க்க




தாத்தாவின் நினைவு நாளில் ...அப்பாவின் கோரிக்கை

என் தந்தை கரம்பற்றி
நான் நடந்ததாக
எனக்கு நினைவில்லை !

அதை வாங்கிக் கொடுங்கள்
இதை வாங்கிக் கொடுங்கள்
என என் தந்தையிடம்
நான் கேட்டதாக
நினைவுகள் இல்லை !

அப்பாவின் முதுகில்
அமர்ந்து யானை
சவாரி செய்ததாகவோ
அவர் ஓட்டும்
வண்டியில் அமர்ந்து
பள்ளிக்குச்சென்றதாகவோ
எந்த வித நினைவுகளும் இல்லை !

ஏழு வயதில்
அப்பாவின் பாடையோடு
இடுகாட்டிற்குப்போனது
மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது !

ஆறடி உயரமுள்ள
அப்பாவை
ஆறடி உயரமுள்ள
குழிக்குள் உள்ளே இறக்கி
கல்லைப் போடு
கல்லைப் போடு
மண்ணைப் போடு
மண்ணைப் போடு
என்று மற்றவர்கள் சொல்ல
கல்லைப் போட்டு
மண்ணைப் போட்டு குழியை
மூடியது மட்டுமே
நினைவுகளில் இருக்கிறது !

கங்காரு போல்வே
பிள்ளைகளைச்
சுமந்து கொண்டே
அலைகின்றாய் என
நண்பர்கள் திட்டியபோதும்
அவரவராய் வளரட்டுமே
எனப் பலர் அறிவுறுத்தியபோதும்
உங்களோடு இருப்பதிலே
உள்ளபடியே மகிழ்ச்சிதான் !

நான் இழ்ந்ததை
உங்களுக்கு தருவதற்காக
எனை வருத்திக்கொள்வதை
எனது பல்வீன்மாய்
எடுக்க மாட்டீர்கள்
எனும் நம்பிக்கை
எனக்கு உண்டு
என் குழ்ந்தைகளே !

ஆண்டு தோறும்
திதி அன்று திவசம் என்று
தந்தையை இழந்தவர்கள்
உழைக்காதவர்கள்
உண்பதற்கு
இழவு வரி அளிக்கும்
ஏற்பாட்டில் எனக்கு
உடன்பாடில்லை !

என் தந்தை நினைவுநாளில்
முதியோர் இல்லத்தில்
நுழைகின்றேன்
அங்கிருப்போர்
என் தந்தை வயதிலிருப்போர்
இருகரம் கூப்பி
எழுந்து நின்று வணங்கும் போது
என் தந்தையும் உயிரோடு
இருந்திருந்தால்
இவர் வயதில் இருப்பாரோ
எனும் எண்ணம் ஓட
அவர்க்ளுக்கு வண்க்கம்
சொல்லிபடியே நுழைகின்றேன் !
என்னால் முடிந்ததை
அவர்களுக்கு செய்கின்றேன் !

என் குழ்ந்தைகளே !
தாத்தாவின் நினைவு நாளில்
அப்பாவின் கோரிக்கை ....
எதிர்காலத்தில்
என வழியைப் பின்பற்றுங்கள் !
அர்த்தமற்ற சடங்குகளை
ஆழக்குழி தோண்டிப்
புதையுங்கள் !
பெற்றோரின் நினைவு நாளில்
எளியோருக்கு உதவுங்கள் !

எழுதியவர்:முனைவர்.வா.நேரு


















கவிதைக்கான கருத்துகளைப் பார்க்க