எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி
க+விதை=கருத்தை விதை

Followers

எனது வலைத்தளங்கள்

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Monday, January 12, 2015

சோறு



உழைக்கச் சாப்பிட்டாத்தான்
   சோறு உடம்பில் சேரும்
உழைச்சுப் படுத்தாத்தான்
   பாயில் சுகமான உறக்கம் வரும்
உழைக்காமப் படுத்தா தினம்
   வாழ்வில் சீக்குதான் வரும்
உழைச்சாத்தான் நல்ல சோறு வரும்
   உறக்கமும் தானா வரும்

உழைச்சு சாப்பிடறதுதான் சொந்தச் சோறு
   உழைக்காமச் சாப்பிட்டா அது தர்மச் சோறு
அப்பா உழைச்சு பிள்ளை சாப்பிட்டா-அது பாசச் சோறு
   பிள்ளை உழைச்சு அப்பா சாப்பிட்டா அது கடமைச் சோறு

பரம்பரை சொத்தை இருந்து சாப்பிட்டா-அது பங்குச் சோறு
   குடும்பம் ஒண்ணா உழச்சு ஒண்ணாச் சாப்பிட்டா-அது
    கூட்டுச்சோறு
பிறரை ஏமாற்றிச் சாப்பிட்டா-அது
    சாபச் சோறு
இயலாதவனுக்கு சாப்பாடு கொடுத்தா-அது
   புண்ணியச் சோறு

'சமூக நிறங்கள் நிஜங்கள்' என்னும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
ஆசிரியர்:  கவிஞர் 
                          பூமுகம் இரா.பெருமாள்

No comments: